நத்தம் அருகே அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க.வினர்
நத்தத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
செந்துறை,
நத்தம் அருகே உள்ள பாலப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் நாட்டாண்மை குப்பான் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இருந்து விலகினர். அவர்கள் நத்தத்தில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் ஒன்றிய செயலாளர் ஷாஜகான், நத்தம் பேரூர் கழக செயலாளர் சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story