போதிய விலை கிடைக்காததால் சாலையோரத்தில் கொட்டப்படும் முள்ளங்கி


போதிய விலை கிடைக்காததால் சாலையோரத்தில் கொட்டப்படும் முள்ளங்கி
x
தினத்தந்தி 31 July 2020 6:45 AM IST (Updated: 31 July 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் முள்ளங்கியை சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர்.

கம்பம், 

தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சைக்கு அடுத்தபடியாக பீட்ரூட், முள்ளங்கி, புடலங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தற்போது குறுகிய கால பயிரான முள்ளங்கி அதிகளவில் பயிரிடப்பட்டிருந்தது.

தற்போது முள்ளங்கி நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் முள்ளங்கிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கிலோ முள்ளங்கி ரூ.5-க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சாகுபடி செய்த செலவை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தோட்டங்களிலேயே முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சில இடங்களில் அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கியை வியாபாரிகள் வாங்க முன் வராததால் சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர்.

Next Story