தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு பூதலூரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் முகில், கண்ணகி, பூதலூர் ஒன்றிய துணை செயலாளர்கள் செந்தில்குமார், துரைராஜ், ஒன்றிய கவுன்சிலர் லதா உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி வடக்கு பூதலூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story