திருச்சி மாவட்டத்தில் 118 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,011 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தநிலையில், திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 84 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 88 பேரும், திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 19 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என 21 பேரும் ஆக மொத்தம் 109 பேர் பூரண குணம் அடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர்.
பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா
உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று முன்தினம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மண்ணச்சநல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), ஜீப் டிரைவர் உள்பட 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்படும் முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது. முன்னதாக அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல, மண்ணச்சநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.
Related Tags :
Next Story