ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கூடுதலாக வந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆசிரியர்
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கூடுதலாக வந்த பணத்தை போலீசாரிடம் ஆசிரியர் ஒருவர் ஒப்படைத்தார்.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(வயது 50). பட்டதாரி ஆசிரியரான இவர் திராவிடநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை ஆண்டிமடத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து இவர் எடுத்த பணத்தை விட ரூ.9 ஆயிரம் கூடுதலாக வந்துள்ளது. இதையடுத்து அவர் ரூ.9 ஆயிரத்தையும் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீஸிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பார்த்து போலீசார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story