ராணிப்பேட்டை பகுதியில் கார்களை வாடகைக்கு எடுத்து அடகு வைத்தவர் கைது - 18 வாகனங்கள் பறிமுதல்


ராணிப்பேட்டை பகுதியில் கார்களை வாடகைக்கு எடுத்து அடகு வைத்தவர் கைது - 18 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 July 2020 8:08 AM GMT (Updated: 31 July 2020 8:08 AM GMT)

ராணிப்பேட்டை பகுதியில் கார்களை வாடகைக்கு எடுத்து அடகு வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). இவரது காரை ஆற்காட்டை சேர்ந்த உதயகுமார் என்பவர் வாடகைக்கு எடுத்து வேறு நபரிடம் அடகு வைத்துவிட்டார்.

இதுகுறித்து வினோத்குமார் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதயகுமாரை கைது செய்தனர். 

மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இதேபோல் 18 பேரின் கார்களை வாடகைக்கு எடுத்து பல்வேறு நபர்களிடம் அடகு வைத்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அடகு வைத்திருந்த 18 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story