திருப்பத்தூர் அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை சாவு


திருப்பத்தூர் அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை சாவு
x
தினத்தந்தி 31 July 2020 8:13 AM GMT (Updated: 31 July 2020 8:13 AM GMT)

திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூரை அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 வயதில் வேதிஸ் என்ற ஆண் குழந்தை இருந்தது. 

இந்த நிலையில் வேதிஸ் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி தலை கீழாக விழுந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளான்.

குழந்தையை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story