மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது + "||" + Rowdy arrested for extorting money from drug dealer

மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது

மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 41), இவர், வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி 4-வது மெயின் ரோடு பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன், வினோத் குமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.


இதுபற்றி மருந்து கடைக்காரர் வினோத்குமார் அளித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிலம்பரசனை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலம்பரசன், தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பைபாஸ் சாலையில் நின்று கொண்டு அங்கிருந்து ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று சிலம்பரசனை கைது செய்தனர்.

இதுபற்றி வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

9 வழக்குகள்

கைதான சிலம்பரசன் மீது 9 வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சிலம்பரசன், கடந்த 22-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மருந்து கடைக்காரரை செல்போனில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வழக்கில் தன்னை போலீசார் தேடி வருகின்றனர் என்பதை தெரிந்த ரவுடி சிலம்பரசன், ஆந்திராவுக்கு தப்பிச்செல்ல முயன்றார்.

அப்போது இரும்புலியூர் பைபாஸ் சாலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சிலம்பரசனை தனிப்படை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மறியல்

இதற்கிடையில் ரவுடி சிலம்பரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற செயலாளர் கேது என்ற தென்னவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் மறைமலைநகர் பஸ் நிறுத்தம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தென்னவன் உள்பட 21 பேரை கைது செய்து வேனில் ஏற்றி மறைமலைநகர் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது.
2. செம்பனார்கோவில் அருகே கத்தியால் குத்தி தொழிலாளி கொலை 3 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3. நாகையில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
நாகையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
4. உத்தர பிரதேசத்தில் மாநில செயலக அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
உத்தர பிரதேசத்தில் பல ஆண்டுகளாக மாநில செயலக அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் வந்து மதுரையில் பதுங்கிய 23 அகதிகள் கைது போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவரும் சிக்கினார்
கள்ளத்தோணியில் இலங்கையில் இருந்து வந்து மதுரையில் பதுங்கிய 23 அகதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவரும் சிக்கினார்.