திருப்பத்தூரில், விவசாயிகளுக்கு வேளாண்மை பண்ணைய பயிற்சி ஆன்லைன் மூலம் நடந்தது
திருப்பத்தூரில் விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் வேளாண்மை பண்ணைய பயிற்சி நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா, ஆதியூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேளாண்மை பண்ணைய பயிற்சி ஆன்லைன் மூலமாக நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன் பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் திருப்பத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி, இயற்கை உரம், மண்புழு தயாரித்தல் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குனர் நாசர் கால்நடை வளர்ப்பு முறை பற்றி எடுத்துரைத்தார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கந்திலி வினோதினி காய்கறி வளர்ப்பு முறை குறித்து விளக்கினார். இதில் வேளாண்மை அலுவலர் சிவாஸ்திகா ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்டம், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் பிரவின்குமார், மேரிவீனஸ், உதவி தொழில்நுட்ப மேலாளர் மணியரசு, குமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story