கோவையில் கொரோனாவுக்கு 9 பேர் பலி


கோவையில் கொரோனாவுக்கு 9 பேர் பலி
x
தினத்தந்தி 31 July 2020 10:00 PM GMT (Updated: 1 Aug 2020 4:11 AM GMT)

கோவையில் கொரோனாவுக்கு 9 பேர் பலியானார்கள்.

கோவை,

கோவை மதுக்கரை காந்திநகரை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் அவர் நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று திடீரென்று அவர் இறந்தார். சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த 46 வயது பெண்ணுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அவர் கடந்த 24-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. அவர் நேற்று உயிரிழந்தார்.

கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று அவர் உயிரிழந்தார். செல்வபுரத்தை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் கடந்த 29-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. நேற்று அவர் உயிரிழந்தார்.

செட்டிவீதியை சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 27-ந் தேதி அனு மதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால் நேற்று அவர் திடீரென உயிரிழந்தார்.

குறிச்சியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் கடந்த 27-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்தார். தாமஸ் வீதியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் கடந்த 29-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவர் திடீரென இறந்தார். கரும்புக்கடையைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் நேற்று முன்தினம்அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அன்றே அவர் உயிரிழந்தார். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்து உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் கடந்த 29-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வெளி மாவட்டத்தில் இருந்து வந்த அவருக்கு பரிசோதனை செய்ததில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். கொரோனாவுக்கு பலியானதால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படவில்லை கோவையில் தகனம் செய்யப்பட்டது.

Next Story