மாவட்ட செய்திகள்

திருப்பூர், கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 51 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்வு + "||" + Tirupur, including the staff of the Collector's Office Corona for 51 people - The number of victims has risen to 873

திருப்பூர், கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 51 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்வு

திருப்பூர், கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 51 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர், 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 6-வது கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் 7-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபோல் மீண்டும் போக்குவரத்திற்கு தடையே உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு சில தளர்வுகளும் அமலில் இருந்து வருகின்றன. இருப்பினும் கொரோனாவின் கோர தாண்டவம் தமிழகத்தில் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 51 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன்படி திருப்பூர் மாவட்டம் தெக்கலூரை சேர்ந்த 29 வயது ஆண், 24 வயது ஆண், குமாராபாளையத்தை சேர்ந்த 57 வயது பெண், 55 வயது ஆண், 24 வயது பெண், ஜெய்நகரை சேர்ந்த 60 வயது ஆண், திருமுருகன்பூண்டியை சேர்ந்த 55 வயது பெண், குமாராபாளையத்தை சேர்ந்த 17 வயது பெண், ராக்கியாபாளையத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, 48 வயது பெண், குமாராபாளையத்தை சேர்ந்த 61 வயது ஆண், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 59 வயது பெண், 38 வயது ஆண், தெக்கலூரை சேர்ந்த 3 வயது சிறுமி, ராஜீவ்நகரை சேர்ந்த 56 வயது ஆண், நியூ திருப்பூரை சேர்ந்த 21 வயது பெண், 22 வயது பெண், திருப்பூர் தொழிலாளர் நல அலுவலக ஊழியரான உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்த 50 வயது பெண், திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு ஊழியரான, உடுமலை ஜீவாநகரை சேர்ந்த 35 வயது பெண், உடுமலை போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரரான 42 வயது ஆண், காங்கேயம் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்களான 41 வயது ஆண், 23 வயது பெண், 29 வயது பெண், உடுமலை சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்த 43 வயது ஆண், மூர்த்திநகரை சேர்ந்த 37 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 70 வயது பெண்.

ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்த 24 வயது ஆண், நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 27 வயது பெண், மாநகர போலீசான 27 வயது பெண், ஹவுசிங் யூனிட் செந்தில்நகரை சேர்ந்த 26 வயது ஆண், முத்துநகரை சேர்ந்த 7 வயது சிறுமி, பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 27 வயது பெண், பிச்சம்பாளையத்தை சேர்ந்த 36 வயது பெண், திருமுருகன்பூண்டி போலீஸ்காரரான 26 வயது ஆண், பல்லடம் பாரதிபுரத்தை சேர்ந்த 46 வயது ஆண், முத்தையன்நகரை சேர்ந்த 44 வயது ஆண், பாலாஜிநகரை சேர்ந்த 61 வயது ஆண், ஆர்.வி.இ.நகர் 5-வது தெருவை சேர்ந்த 60 வயது ஆண், வி.ஜி.வி. கார்டன் 26-வது வீதியை சேர்ந்த 36 வயது ஆண், கரடிவாவியை சேர்ந்த 26 வயது பெண், திருமுருகன்பூண்டியை சேர்ந்த 72 வயது ஆண், கல்லம்பாளையத்தை சேர்ந்த 43 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 37 வயது ஆண், உடுமலை ராமசாமிநகரை சேர்ந்த 20 வயது ஆண், ஸ்ரீலட்சுமிநகரை சேர்ந்த 65 வயது ஆண், பெருமாநல்லூரை சேர்ந்த 34 வயது ஆண், 25 வயது ஆண், 18 வயது ஆண், 25 வயது ஆண், முத்தூர் வெள்ளகோவிலை சேர்ந்த 43 வயது ஆண், பிக்பஜார் தெருவை சேர்ந்த 27 வயது ஆண் ஆகிய 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.