ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டிலேயே தொழுகையை நடத்திக்கொள்ளுங்கள் - முஸ்லிம்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
ஊரடங்கு அமலில் இருப்பதால் முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகையை நடத்திக்கொள்ளுங்கள் என போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கள்ளக்குறிச்சி,
பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக இஸ்லாமியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் பேசும்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த கூடாது. அனைத்து இஸ்லாமியர்களும் அவரவர் இல்லத்திலேயே தொழுகையை நடத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கூட்டத்தில் அனைத்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு தலைவர் உசேன், ஜிம்மா பள்ளிவாசல் ஆலோசனை கமிட்டி செயலாளர் ஜானி, இஸ்லாமிய கூட்டமைப்பு செயலாளர் சர்புதீன், முத்தவல்லி பக்ரி முகமது உள்பட இஸ்லாமிய கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story