இன்று முழு ஊரடங்கு: தூத்துக்குடி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் (ஜூலை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதமும் (ஆகஸ்டு) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்படும். மார்க்கெட்டுகள் மூடப்படும். பால், மருந்து கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி, மார்க்கெட்டுகள், கடைகளில் காய்கறிகள், பொருட்கள் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தற்காலிக மார்க்கெட்டில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் காய்கறிகள் வாங்கி சென்றனர்.
மார்க்கெட்டில் கத்தரிக்காய் கிலோ ஒன்று ரூ.20-க்கும், தக்காளி ரூ.25, வெண்டைக்காய் ரூ.15, முருங்கைக்காய் ரூ.30, காலிபிளவர் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.35-க்கும், சின்ன வெங்காயம் ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.20, தேங்காய் ரூ.15, பீன்ஸ் ரூ.50, அவரைக்காய் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Tags :
Next Story