குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு


குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2020 7:15 AM IST (Updated: 2 Aug 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம், குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஒரத்தி போலீசார் கடந்த மாதம் மினி கன்டெய்னர் லாரியில் எரிசாராயம் கடத்தியதாக அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் (வயது 28), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், சலவாதி கிராமத்தை மாரி என்ற நண்டு மாரி (55) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களில் விமல்ராஜ், மாரி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிசுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். போலீசாரின் பரிந்துரையை ஏற்று விமல்ராஜையும், மாரியையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story