மாவட்ட செய்திகள்

ஜம்முகாஷ்மீரில், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு - திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் + "||" + In Jammu and Kashmir, gunfire erupted Injured soldier dies without treatment - Hailing from Thiruvarur district

ஜம்முகாஷ்மீரில், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு - திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்

ஜம்முகாஷ்மீரில், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு - திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஜம்முகாஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள புள்ளவராயன்குடிகாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் திருமூர்த்தி (வயது47). இவர் ஜம்முகாஷ்மீரில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி அங்கு திருமூர்த்தி எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

ஜம்முகாஷ்மீரில் மரணம் அடைந்த ராணுவ வீரர் திருமூர்த்திக்கு தமிழரசி (44) என்ற மனைவியும், அகல்யா (24) என்ற மகளும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனர்.

திருமூர்த்தியின் உடல் சொந்த ஊரான புள்ளவராயன்குடிகாடு கிராமத்துக்கு விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமூர்த்தி இறந்த தகவல் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.