மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை + "||" + Full Curfew: Rameswaram fishermen banned from going to sea

முழு ஊரடங்கு: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

முழு ஊரடங்கு: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
முழு ஊரடங்கையொட்டி ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி ராமேசுவரம் பகுதியில் 2 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ராமேசுவரத்தில் நேற்று 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் துறைமுக கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.