மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சாவு + "||" + Death of a woman who stepped on a severed electric wire

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சாவு

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சாவு
அரியலூரில் வீட்டின் பின்புறம் கட்டபட்டிருந்த மாட்டை பார்க்க சென்ற பெண் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி ஜெயமணி(வயது 40). இவர்கள் மாடுகள் வளர்த்தும், கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் கட்டபட்டிருந்த மாட்டை பார்க்க சென்றுள்ளார். 

அதற்கு முன்னதாகவே அவ்வழியே சென்று கொண்டிருந்த தாழ்வான மின்கம்பி பலமாக காற்று வீசியதால் அறுந்து மாட்டின் மீது விழுந்துள்ளது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. அதனை அறியாமல் இருட்டில் மாட்டை தேடி சென்ற ஜெயமணியும் தவறுகளாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனை பார்த்த அப்பகுதியினர் தூத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேள்விபட்டு அவரது வீட்டின் முன்பு ஊர் மக்கள் பலர் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.