முன்னாள் எம்.எல்.சி. ஐவான் டிசோசாவுக்கு வைரஸ் தொற்று டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா பாதிப்பா? காங்கிரசார் இடையே பரபரப்பு
முன்னாள் எம்.எல்.சி. ஐவான் டிசோசாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று காங்கிரசார் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வந்தார். அவர் மங்களூருவில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருடன் முன்னாள் எம்.எல்.சி. ஐவான் டிசோசா, அவருடைய மனைவி கவிதா, முன்னாள் மந்திரி யு.டி.காதர் உள்பட ஏராளமான காங்கிரசார் இருந்தனர். மேலும் அங்கு 30-க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் செய்தி தொலைக்காட்சி நிருபர்களும் திரண்டிருந்தனர்.
பேட்டி முடிந்த பின்னர் டி.கே.சிவக்குமார் மங்களூருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் வீட்டிற்கு சென்றார். அவருடன் ஐவான் டிசோசாவும், யு.டி.காதரும் சென்றனர். அதையடுத்து டி.கே.சிவக்குமார் மங்களூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய ஐவான் டிசோசாவும், டாக்டரான அவருடைய மனைவி கவிதாவும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவர்கள், தங்களை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்றும், தங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ. தன்னை தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நான் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ள ஐவான் டிசோசாவுடன் நேரடி தொடர்பில் இருந்தேன். அதனால் என்னை நானே எனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும் நான் என்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அடுத்த சில நாட்களுக்கு என்னுடைய அரசு பணிகளை மேற்கொள்வதில் இருந்து விடுபட்டுள்ளேன். அதனால் என்னை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம். என்னை போனில் தொடர்பு கொள்ளுங்கள். நானும், ஐவான் டிசோசாவும் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டிக் கொள்ளுங்கள். கொரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே டி.கே.சிவக்குமாரை பேட்டி எடுத்த 30-க்கும் மேற்பட்ட நிருபர்களை சுகாதார துறையினர் கண்டறிந்து தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டி.கே.சிவக்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. இது கர்நாடக காங்கிரசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story