மும்மொழி கல்வித் திட்டம் மக்களுக்கு பலனளிக்காது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
மும்மொழி கல்வித் திட்டம் என்பது மக்களுக்கு பலனளிக்காது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் முதல்கட்டமாக கொரோனா பாதிப்பு குறித்த ஆரம்ப அறிகுறி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கின்றனர். 2-வதாக சிறிய அளவில் பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை அளிக்கின்றனர். மீதி நான்கு நிலைகளில் உள்ளவர்களை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் அனுமதிக்கின்றனர்.
அதாவது நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் உள்ளவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து கண்காணிக்கின்றனர். 5, 6-வது நிலையில் உள்ளவர்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுபவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணிக்கின்றனர். நமது மாநிலத்தில் அந்த நிலையில் உள்ளவர்கள் 10 சதவீதம் பேர்தான். வருகிற 31-ந் தேதிக்குள் சுமார் 6 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ குழுவினர் கணித்துள்ளனர். அதன்படி பார்த்தால் 500 முதல் 700 பேருக்கு தான் தீவிர கண்காணிப்பு தேவைப்படும். அதற்கு தேவையான டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
மாகியில் ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சை இல்லை. மத்திய அரசு உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவரின் வீட்டை மட்டும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களது வீட்டிற்கு டாக்டர்கள், செவிலியர்கள் சென்று கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். தொற்று பாதிப்பு அதிகமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தைப் போல் சித்தா ஆயுர்வேத முறை சிகிச்சையை புதுவையிலும் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை திட்டம் மக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. கல்வியில் பல மாற்றங்களை கொண்டு வருவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் வேதபாட சாலை திட்டம், குலக்கல்வி முறையை கொண்டு வருகிறார்கள். மும்மொழி கல்வித் திட்டம் என்கிறார்கள். இது மக்களுக்கு பலனளிக்காது.
ஏனெனில் வடமாநிலங்கள் போல் தென் மாநிலங்கள் இல்லை. கல்விக்கொள்கைகள், வேலைவாய்ப்பினை நோக்கி நமது பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக்கொள்கையால் மாற்றம் வரும் என்று நாம் நம்பவில்லை. இதற்கான நிதி எங்கு உள்ளது. மாநில அரசுகளின் மீது மத்திய அரசு நிதிச்சுமையை ஏற்படுத்த பார்க்கிறது.
புதுவையில் கல்லூரி வரை இலவச கல்வி தருகிறோம். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் 12-ம் வகுப்பு வரை மட்டுமே இலவச கல்வி உள்ளது. இது ஏற்க கூடியது அல்ல. சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நாட்டில் பல மொழிகள், கலா சாரம் உள்ளது. அதற்கேற்ப கல்விக்கொள்கை இருக்க வேண்டும். தங்களது விருப்பத்தை மக்களிடம் திணிக்கக் கூடாது. இருமொழிக்கொள்கை தான் வேண்டும். தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம். விருப்பப்பட்டவர்கள் இந்தி படிக்கலாம். இந்தித் திணிப்பு என்பதை ஏற்க முடியாது.
புதுச்சேரி ஒரு தனித்தன்மையான மாநிலம். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 5 மொழிகளை நாம் அங்கீகரித்து உள்ளோம். எனவே மத்திய அரசு செய்வதை முழுமையாக ஏற்க முடியாது. மத்திய அரசின் கொள்கை தொடர்பாக மக்களிடம் கருத்துக்களை கேட்டு பதிவு செய்வோம். இதுகுறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே ஆன்லைன் மூலம் கல்வி கற்க தேவையான வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story