அரியலூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் 27 பேர் பாதிப்பு


அரியலூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் 27 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2020 4:00 AM IST (Updated: 3 Aug 2020 9:08 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 950 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 27 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 189 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரத்தில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களான பெரம்பலூர் 8-வது வார்டு கே.கே.நகரை சேர்ந்த 27 வயதுடைய ஆண், நான்கு ரோடு துறைமங்கலத்தை சேர்ந்த 28 வயதுடைய ஆண், ஜமாலியா நகரை சேர்ந்த 26 வயதுடைய ஆண், நாரணமங்கலத்தை சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஆகியோருக்கும், களரம்பட்டி 4-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் 44 வயது ஆண் மற்றும் அவரது 32 வயது மனைவிக்கும், பாடாலூர், புஜங்ராயநல்லூரில் கணவனை தொடர்ந்து, அவர்களது மனைவிகளுக்கும், அயன்பேரையூரில் 9 வயது சிறுவனுக்கும், பாடாலூர் மணியங்குறிச்சி காலனி, அழகிரிபாளையம் அல்லு நகர் தெற்கு தெரு, அய்யனாபுரம், செட்டிகுளம் வடக்கு தெரு, குடிகாடு தெற்கு தெரு, சிறுநிலா வடக்கு தெரு, அனுக்கூர் காலனி தெரு, வேப்பந்தட்டை மேல்நிலைப்பள்ளி தெரு, பாளையூர் தெற்கு தெரு, வயலப்பாடி மாரியம்மன் கோவில் தெரு, அந்தூர், அல்லிநகரம் மெயின்ரோடு, பெரம்பலூர் நியூ சிவன் கோவில் தெருவில், இந்திரா தெரு, கீழப்பெரம்பலூர், பெரம்பலூர் மாதாக கோவில் தெரு, பள்ளிவாசல் தெருவில் உள்ள கடையில் ஒருவருக்கும் என மொத்தம் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் ஆண்கள் ஆவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 497-ல் இருந்து 527 ஆக உயர்ந்துள்ளது. இதில் 308 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story