சொத்து விற்பனை பத்திரங்களை பொதுமக்களே தாக்கல் செய்ய எளிதான நடைமுறை - பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை


சொத்து விற்பனை பத்திரங்களை பொதுமக்களே தாக்கல் செய்ய எளிதான நடைமுறை - பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2020 10:15 AM IST (Updated: 3 Aug 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

இணையதளம் மூலம் பொதுமக்களே சொத்து விற்பனை பத்திரங்களை தாக்கல் செய்யும் நடைமுறையை பத்திரப்பதிவுத்துறை எளிதாக்கி உத்தரவிட்டுள்ளது. இது பற்றி பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளதாவது:-

விருதுநகர்,

பத்திரப்பதிவுத்துறை அனைத்து நடைமுறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்டார்-2 என்ற மென்பொருள் மூலம் ஆன்லைனில் பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் ஆன்லைன் வழியாக விற்பனை பத்திரங்களை தாக்கல் செய்யும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இதற்காக பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் உள்நுழைவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதன் பின் பயனாளியின் பெயரை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து பதிவு செய்யும் ஆவணத்தை உருவாக்கி எந்தவகை பத்திரம் என்பதை தேர்வு செய்து சொத்து விற்பனை மற்றும் அதற்கான மூலப்பத்திரம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் பத்திரம் எழுதி கொடுப்பவரின் பெயர், விலாசம் உள்ளிட்ட முழு விவரங்களை பதிவு செய்வதுடன் பொது அதிகாரங்கள் ஏதேனும் இருந்தால் அது பற்றிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 2 சாட்சிகளின் விவரங்கள் சொத்தின் சர்வே எண் பரப்பு உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் கட்டணத்தை செலுத்தி பத்திரத்தை வெள்ளை தாள் அல்லது முத்திரை தாளில் நகல் எடுத்து முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் பதிவு செய்யலாம். பிழைகள் ஏதும் இருந்தால் பதிவுக்கு முன்பு திருத்திக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த எளிமையான நடைமுறையை பயன்படுத்தி பொதுமக்கள் ஆன்லைனில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story