ஈரோடு மாவட்டத்தில், ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில், ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Aug 2020 12:00 PM IST (Updated: 3 Aug 2020 11:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்ட கொரோனா பரவலின் போது 70 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் இறந்த நிலையில் மீதமுள 69 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். அதன் பின்னர் ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியது.

அதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அலை வீசத்தொடங்கியது. இந்த அலையின் தாக்கம் தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 732 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 754 ஆக உயர்ந்தது.

நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 7 பேரும், பவானி பகுதியில் 6 பேரும், மொடக்குறிச்சி பகுதியில் 4 பேரும், சித்தோடு மற்றும் பெருந்துறை பகுதிகளை சேர்ந்த தலா 2 பேரும், நம்பியூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 4 பேருக்கும், தொடர்பில்லாமல் 16 பேருக்கும், வாகனங்களில் பயணம் செய்யும்போது 2 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அதே நேரம் நேற்று ஒரே நாளில் 32 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் 583 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில், தற்போது 162 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story