போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை குறித்த ஆன்லைன் பயிற்சி - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்


போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை குறித்த ஆன்லைன் பயிற்சி - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Aug 2020 11:45 PM GMT (Updated: 3 Aug 2020 6:28 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாருக்கு மனஅழுத்த மேலாண்மை குறித்து ஆன்லைன் பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் முதல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வரை கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் எதிர்கொள்ளும், மன அழுத்த மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 180 பேர் வீதம் 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் ஒரு நாள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக தனிப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் மணியாச்சி உட்கோட்டத்தில் பணியாற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கிலும், தூத்துக்குடி உட்கோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லுாரியிலும், தூத்துக்குடி ஊரகம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சாயர்புரம் போப்ஸ் கல்லூரியிலும், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் உள்ளவர்களுக்கு திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் உள்ளவர்களுக்கு கோவில்பட்டி வேல்ஸ் மேல் நிலைப்பள்ளியிலும் மற்றும் விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் உள்ளவர்களுக்கு எட்டயாபுரம் ராஜா மேல் நிலைப்பள்ளி ஆகிய 6 இடங்களில் பயிற்சி நடக்கிறது.

இந்த பயிற்சியை ஆன்லைன் மூலம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த ஆன்லைன் பயிற்சியில் சென்னை மன நல டாக்டர்கள் கண்ணன், சித்ரா அரவிந்தன், ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டுகள் சித்தனாதன், கருணாநிதி, ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பரந்தாமன், சென்னை போலீஸ் அகாடமி துணை கண்காணிப்பாளர் லட்சுமி காந்தன், அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நாகராஜன், ஆத்மரஞ்சன் யோகவித்யாலயா பிரகாஷ், சென்னை மனவளக்கலை மன்றம் சிவக்குமார், பிசியோதெரபிஸ்ட் ரவி சாமுவேல் ஆகிய அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story