சுத்தமல்லி அருகே முன்விரோதத்தில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - தம்பதி உள்பட 3 பேர் கைது
சுத்தமல்லி அருகே முன்விரோதத்தில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை,
நெல்லை சுத்தமல்லியை அடுத்த பழவூர் சின்ன பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 40) தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50). இவர்கள் 2 பேருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதுகுடித்து விட்டு வந்த சுப்பையா, பாலகிருஷ்ணனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தி, உறவினரான செல்வம் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து சுப்பையாவை தாக்கியுள்ளனர். மேலும் சுப்பையாவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுப்பையா மனைவி புஷ்பவள்ளி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணன், சாந்தி, செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

Related Tags :
Next Story