பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வினியோகம் தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வினி யோகம் நேற்று தொடங்கியது.
நெல்லை,
தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் தொடங்கும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக்கூடங் கள் இந்த மாதம் தொடங்க வாய்ப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் கூட்டமாக பள்ளிக்கு வருவதை தவிர்க்கவே இந்த முடிவை அரசு எடுத்துள் ளது. இந்த நிலையில் பல தனியார் பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த தொடங்கி விட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ பதிவு மூலம் பாடம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பாடப் புத்தகங்களை மாணவர் களுக்கு வழங்கி வருகிறது. முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள் ளது. அனைத்து பாடப் புத்த கங்களும் ஏற்கனவே நெல்லை மாவட்டத்துக்கு வந்து விட்டன. அந்த புத்தகங்கள் கல்வி மாவட்டம் வாரியாக பிரித்து அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களிடம் கொடுக்கப் பட்டது.
நேற்று காலை 2, 3, 4, 5, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வினி யோகம் தொடங்கியது. மாண வர்கள் பள்ளிக்கு வரவழைத்து புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர் கள் சமூக இடைவெளி விட்டு நின்று முககவசம் அணிந்து புத்தகங்களை வாங்கிக் சென்றனர். மேலும் புத்தக பையும் வழங்கப்பட்டன. புதிய புத்தகங்களை மாண வர்கள் ஆர்வமாக பார்த்தனர். தொடர்ந்து 4 நாட்களுக்கு புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 1, 6, 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் மாறுவ தால், அவர்களுக்கு புத்தக ங்கள் வழங்கப்படவில்லை.

Related Tags :
Next Story