காஞ்சீபுரத்தில் இன்று மின்தடை


காஞ்சீபுரத்தில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 3 Aug 2020 11:34 PM GMT (Updated: 3 Aug 2020 11:34 PM GMT)

காஞ்சீபுரத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே காஞ்சீபுரம் நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை மின்நிலையங்களை சேர்ந்த கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்து உள்ளார்.

Next Story