திருடிய நகைகளை விற்று காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்த கொள்ளையன் கைது


திருடிய நகைகளை விற்று காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்த கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 4 Aug 2020 5:20 AM IST (Updated: 4 Aug 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

திருடிய நகைகளை விற்று காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் நிலையங்களின் எல்லை பகுதியில் அடிக்கடி பூட்டிய வீடுகளில் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போனது. அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். கேமராவில் கொள்ளை ஆசாமி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த கொள்ளை ஆசாமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அந்த கொள்ளை ஆசாமியின் பெயர் மேகநாதன் (வயது 34).சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தான் திருடிய நகைகளை விற்று அதில் வந்த பணத்தில் தனது காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்திருப்பது தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story