நிலம் சம்பந்தமாக ஏலாக்குறிச்சி பொதுமக்கள் மனு


நிலம் சம்பந்தமாக ஏலாக்குறிச்சி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 4 Aug 2020 7:00 AM IST (Updated: 4 Aug 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி கிராமம் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் மக்கள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,

அரியலூர், 

எங்களுக்கு சொந்தமான நிலத்தை நாங்கள் எங்களது மூதாதையர் காலத்தில் இருந்து அனுபவித்து பயிர் செய்து வருகிறோம். ஆனால் அந்த நிலத்தை எங்களுக்கு தெரியாமல் கிராம நிர்வாக அதிகாரி தெருவுக்கு வீட்டு மனை எழுதி கொடுத்துள்ளதாக கூறினார். சம்பந்தப்பட்ட நிலத்திற்கு எங்களிடம் அடங்கல் சிட்டா உள்ளது. காலம் காலமாக அனுபவித்து வந்த எங்களுக்கு சொந்தமான நிலத்தில் தைல மரக்கன்று நட்டிருந்தோம். அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி எங்களை மிரட்டுகிறார். மேலும் நாங்கள் காண்பித்த ஆவணங்களை பார்த்து விட்டு பதில் ஏதும் கூறவில்லை. இதனால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் நாங்கள் மன உளைச்சலின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுவை போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story