மாவட்ட செய்திகள்

டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + TV Dispute with sister over channel change: Schoolgirl commits suicide by hanging

டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
டி.வி.யில் சேனல் மாற்றுவதில் தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.
காலாப்பட்டு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவர் புதுவை மாநிலம் சேதராப்பட்டு சரஸ்வதி நகரில் கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யசுதா. இவர்களுடைய மகள்கள் கவுசிகா (வயது 14), ஆசிகா (12). இதில் மூத்தமகள் கவுசிகா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று 9-ம் வகுப்பு செல்ல தயாராக இருந்தார்.


நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவுசிகாவுக்கும், தங்கை ஆசிகாவுக்கும் டி.வி.யில் சேனல் மாற்றுவது தொடர்பாக சண்டை ஏற்பட்டது. அப்போது தாயார் சத்யசுதா, தங்கையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுமாறு கவுசிகாவை கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவள், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.

தூக்கில் தொங்கினாள்

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த செபஸ்டின், சத்யசுதா ஆகியோர் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கவுசிகா தொங்கினார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகளை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவுசிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு செபஸ்டின் மற்றும் அவருடைய மனைவி கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

தங்கை பிறந்தநாள்

இது குறித்து சேதராப்பட்டு போலீசில் செபஸ்டின் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். நேற்று தங்கையின் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் முதல்நாள் அக்காள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை
மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்
திருச்சியில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
4. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
5. தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையால் பட்டதாரி பெண் தற்கொலை முசிறி சப்-கலெக்டர் விசாரணை
தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...