அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 5 Aug 2020 6:52 AM IST (Updated: 5 Aug 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் நியமிக்கப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க.வினர் நேரில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் நியமிக்கப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க.வினர் நேரில் வாழ்த்துகளை தெரிவித்தனர். சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற வி.சோமசுந்தரம், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், அ.தி.மு.க. நிர்வாகி பிரேமா மோகனசுந்தரம், மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி திலக்குமார் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்திரமேரூர், சாலவாக்கம், மானாம்பதி, பெருநகர், காரணைமண்டபம், கண்டிகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், கூட்டுறவு சங்க தலைவர்கள் தண்டரை தணிகைவேல், முருகன், வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story