மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,500-ஐ தாண்டியது - மேலும் 3 பேர் பலி


மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,500-ஐ தாண்டியது - மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2020 3:30 AM IST (Updated: 5 Aug 2020 7:30 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,500-ஐ தாண்டியது. மேலும் 3 பேர் பலியாகினர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டவுன் பகுதியிலும், ஊரக பகுதியிலும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்ந்தது.

நேற்று 96 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 1,693 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நேற்று வெளியான பட்டியலில் புதுக்கோட்டையை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இருந்த போது இறந்து விட்டார். இதனால் இறப்பு எண்ணிக்கை பட்டியல் 30 ஆக உயர்ந்தது.

இதேபோல புதுக்கோட்டை அய்யனார்புரத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் நேற்று இறந்தார். அவருக்கு மஞ்சள் காமாலை நோயும் இருந்துள்ளது. புதுக்கோட்டை காமராஜபுரம் 2-ம் வீதியை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர், கொரோனாவால் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் இறந்தனர்.

பழைய ஆதனக்கோட்டையில் மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பகுதியில் ஏற்கனவே 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரிமளம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கடந்த சில தினங்களுக்கு உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அந்த வாலிபரின் தாய், தங்கைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடியாபட்டி கிராமத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் என 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. லெணா விலக்கு பகுதியில் கொரோனாவால் பாதிக்கபட்ட கணவன், மனைவி மற்றும் 7 மாத குழந்தை ஆகியோர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

Next Story