பேரூர் அருகே, மரம் முறிந்து விழுந்து வாலிபர் சாவு
பேரூர் அருகே மரம் முறிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-
பேரூர்,
கோவையை அடுத்த பேரூர் சென்னனூர் மேற்குவீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சிறுவாணி மெயின் ரோடு மாதம்பட்டி அருகே தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர், தண்ணீர் பந்தல் பிரிவுக்கு முன்பாக சென்ற போது, பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மரம் முறிந்து ரோட்டில் சென்று கொண்டு இருந்த சதீஷ்குமார் மீது விழுந்தது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சதீஷ்குமாரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story