பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.
பவானிசாகர்,
பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் மூலம் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,072 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 278 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டமும் அதிகரித்து 86.88 அடி ஆனது.
Related Tags :
Next Story