கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார் வீடு திரும்பினர் - டீன் வாழ்த்தி வழியனுப்பினார்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார் வீடு திரும்பினர் - டீன் வாழ்த்தி வழியனுப்பினார்
x
தினத்தந்தி 5 Aug 2020 12:30 PM IST (Updated: 5 Aug 2020 12:17 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார் நேற்று வீடு திரும்பினார்கள். அவர்களை டீன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் வாழ்த்தி வழியனுப்பினர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்களும் ஆளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இருவருக்கும் 2-வது கட்ட பரிசோதனை நடந்தது. அப்போது அவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கியது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் தங்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் டீன் சுகந்தி ராஜகுமாரி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி ரெனிமோல், டாக்டர் ஜாண்கிறிஸ்டோபர் மற்றும் பலர் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் பழங்கள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அதன்பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார் ஆகியோர் கூறும்போது, ‘நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, விரைவாக குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்திய கட்சித்தலைவர்கள் மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எம்.பி, உதயநிதி ஸ்டாலின், வசந்தகுமார் எம்.பி., மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோருக்கும், பிரார்த்தனை செய்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்“ என்றனர்.

Next Story