அரியலூர்-பெரம்பலூரில் மேலும் 55 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் மேலும் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 12 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 3 பேருக்கும் என மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 311 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் பகுதியில் 4 பேருக்கும், அனுக்கூரில் ஒரு பெண்ணுக்கும், அவரது 1 வயது பெண் குழந்தைக்கும், வேப்பந்தட்டையில் 3 பேருக்கும், கிருஷ்ணாபுரம், எழுமூர், எளம்பலூர், வரகூர், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குடியிருப்பு, பெரம்பலூர் மேட்டு தெரு, காமராஜர் வளைவு அருகே, கம்பன் தெரு, லெப்பைகுடிக்காடு, பெரியம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் என மொத்தம் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 170 பேர் கொரோனாவிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 438 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story