கிருஷ்ணகிரி, ஓசூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஓசூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணா சிலை அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் கலீல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எச்.கலீல் முன்னிலை வகித்தார். தொகுதி தலைவர் அப்சல்பாஷா வரவேற்று பேசினார். இதில் மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் நூர்முகமது மற்றும் நிர்வாகிகள் முகமதுகலீல், அன்வர்பாஷா, அல்தாப் அகமத் சித்திக், சனாவுல்லா, திராவிட ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் நகர செயலாளர் ஜாப்பர் நன்றி கூறினார்.
இதேபோல் ஓசூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஷாநவாஸ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பியுல்லா, பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மாவட்ட செயலாளர் அஜாஸ், நகர பொருளாளர் சுபைர், நகர செயலாளர் முகமது அயாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஷபீர் அகமத் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதியை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி, அங்கு நடக்கும் அத்துமீறலை நிறுத்த வேண்டும். முத்தலாக் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொருளாதார பேரழிவை கொரோனாவை மூடி மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story