மதுக்கரை பேரூராட்சியில், ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்


மதுக்கரை பேரூராட்சியில், ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 Aug 2020 6:37 AM GMT (Updated: 6 Aug 2020 6:37 AM GMT)

கோவையை அடுத்த மதுக்கரையில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை,

கோவையை அடுத்த மதுக்கரை சிறப்புநிலை பேரூராட்சியில், ரூ.50 லட்சத்தில் புதிய பாலம் மற்றும் ரூ.1 கோடியில் தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதுபோலவே, நகரப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிகராக மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோவையில் உள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக தார்சாலைகள், சிறுபாலங்கள், குடிநீர் வசதி, பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றின் தரம் உயர்த்தப்பட்டு முன்மாதிரி மாவட்டமாக கோவை திகழ்ந்து வருகின்றது.

மதுக்கரை பேரூராட்சியில், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இருந்து குரும்பபாளையம் ரோடு செல்லும் பகுதியில் ஓடைப்பள்ளம் அமைந்துள்ளது. அப்பகுதியில் மழைக்காலங்களில் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் நடந்து செல்லவும், போக்குவரத்து வாகனங்கள் கடக்கவும் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இருந்து குரும்பபாளையம் சாலையில் ரூ.50 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.18 மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் செல்லும் பாதையில் மேம்படுத்தப் பட்ட தார்சாலை அமைக்க இப்பகுதி மக்களாலும் பல்வேறு பகுதியிலிருந்து தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களாலும் தொடர் ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ரூ.1 கோடியில் தடுப்புச்சுவருடன் தார்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

அதனைத்தொடர்ந்து, தொடர்மழையால் ராஜவாய்க்கால் நீர்வழிப்பாதையில் தண்ணீர் செல்லும் வழியினை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், நொய்யல் ஆற்றில் நீர் நிரம்பி செல்லுவதையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story