ஈரோடு மாவட்டத்தில், ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா - ஒரு வயது குழந்தைக்கும் தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு வயது குழந்தைக்கும் தொற்று உறுதியானது.
ஈரோடு,
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மாநகராட்சி பகுதியில் அதிகமாக பரவி வந்த கொரோனா தொற்று, புறநகர் பகுதியிலும் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது.
நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 40 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் மாவட்டத்தின் புறநகர் பகுதியை சேர்ந்தவர்களாவர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூரம்பட்டி பாரிவள்ளல் வீதி, சூரியம்பாளையம் கொத்துக்காரன்புதூர், வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர், கருப்பன் வீதி, கந்தசாமி வீதி, பி.பி.அக்ரஹாரம், வளையக்கார விதி, பாரதிதாசன் வீதி, மூலப்பாளையம் கே.என்.கே.ரோடு, திருநகர் காலனி, வி.வி.சி.ஆர்.நகர் 2-வது வீதி, மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதி, கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் பவானி நகராட்சி குடியிருப்பு பகுதி, போலீஸ் குடியிருப்பு, தொட்டிபாளையம், கல் தொழிலாளர் வீதி, அம்மாபேட்டை அருகே மூனாஞ்சாவடி, பெருந்துறை சிப்காட், ஈங்கூர், கோபிசெட்டிபாளையம் சில்லுமடை தெற்கு வீதி, டி.என்.பாளையம் அருகே மங்களபுரம், நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் புதுப்பாளையம், மலையபாளையம் ரோடு, செட்டியம்பதி பிள்ளையார் கோவில் வீதி, சத்தியமங்கலம் கொமராபாளையம் அங்காளம்மன் கோவில் வீதி, காந்தி நகர், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் பொங்கர் காலனி, மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறை சூளைமேடு, பாரதிநகர், சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதியானது.
மேலும், புஞ்சைபுளியம்பட்டி அய்யப்பன் கோவில் வீதியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 610 பேர் குணமடைந்து உள்ளனர். 209 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story