நாமக்கல் மாவட்டத்தில் செவிலியர் உள்பட 30 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் செவிலியர் உள்பட 30 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 Aug 2020 8:00 AM IST (Updated: 7 Aug 2020 8:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட 30 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 890 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 868 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இவர்களில் 8 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 860 ஆக குறைந்தது.

இதற்கிடையே நேற்று ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர், வடவத்தூர் மற்றும் ஆயிபாளையம் ஊராட்சி செயலாளர்கள் உள்பட 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று பள்ளிபாளையத்தை சேர்ந்த 4 பேர், ராசிபுரத்தை சேர்ந்த 3 பேர், நாமக்கல் ஆண்டவர் நகர் மற்றும் என்.கொசவம்பட்டி பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், குருசாமிபாளையத்தை சேர்ந்த 2 பேர், மோகனூர், கோனேரிப்பட்டி, 85.ஆர்.குமாரபாளையம், பரமத்திவேலூர், செங்கோடம்பாளையம், துறையூர், அம்மாசிபாளையம், கரடிப்பட்டி, ஆர்.புதுப்பட்டி, வடவத்தூர், ஆயிபாளையம், குமாரபாளையம், கல்குறிச்சி, வேட்டுவம்பாளையம், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் மற்றும் ஆந்திரா சென்று திரும்பியவர் என மொத்தம் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 890 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், பரமத்திவேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 25 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒட்டுமொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 517 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் உயிரிழந்த நிலையில் 361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story