கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ரூ.2.40 கோடியில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சி.டி. ஸ்கேன் கருவியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை,
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி. வேலுமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர், மருத்துவம னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ முறைகள், நோயாளிகளுக்கும் வழங்கப்படும் உணவு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான சி.டி.ஸ்கேன் பரிசோதனை கருவியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அதன்பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 3 மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5,550 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 3,023 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 2586 பேருக்கு தற்போது வரை ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சி.டி. ஸ்கேன் என்பது நோயின் தீவிரத்தை அறியக்கூடிய அத்தியாவசியமான ஒரு பரிசோதனை. எனவே இது பற்றி தமிழக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த மருத்துவமனைக்கு புதிதாக சி.டி. ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 100 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய முடியும். மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடியும்
1749 நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது இந்த ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர். இதில் 75 சதவீதத்துக்கும் மேல் உள்ளவர்கள் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள். எனவே மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரின் உண்மையான அரவணைப்புடன் கூடிய நல்ல சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மகப்பேறு பிரிவில் 96 கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் 25 தாய்மார்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. 25 பச்சிளம் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 19 தாய்மார்கள் குழந்தையுடன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த்தொற்றுடைய 9 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் நலப் பிரிவில் 292 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 266 குழந்தைகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த்தொற்றுடைய 26 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 30 சதவீதம் பேர் தீவிர நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனையில் 450 படுகைகள் உள்ளன. அதில் 240 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இருந்தது. அது அதிகப்படுத்தப்பட்டு 340 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 60 படுக்கை வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தனி வார்டு தொடங்கப்பட்டு உள்ளது மேலும் கூடுதலாக 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது வரை கோவையில் இறப்பு சதவீதம் 1.58 என்ற அளவில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், தென்மேற்கு பருவமழை வெள்ள பாதிப்புகளை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story