மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை + "||" + Female suicide in nostalgia of not being able to see corona curvature mother

கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை
கொரோனா ஊரடங்கால் உடல்நலம் பாதித்த தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாகூர்,

புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அதியமான் (வயது 27). மீனவர். சென்னையைச் சேர்ந்த செம்பருத்தி என்ற சந்திரலேகா (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் செம்பருத்தி, கணவருடன் நல்லவாடு பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.


செம்பருத்தியின் தாயார் சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து தாயாரைப் பார்க்க செம்பருத்தி விரும்பினார். இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மனைவியை அழைத்துச்செல்ல அதியமான் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சென்னை செல்லலாம் என்று அதியமான் தெரிவித்து இருந்தார். அதன்படி கடந்த 5-ந்தேதி பிறந்தநாளும் நடந்து முடிந்தது. ஆனால் அதன் பிறகும் மனைவியை சென்னைக்கு அழைத்துச்செல்லவில்லை. இதனால் மனமுடைந்த செம்பருத்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தவளகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் சென்னையில் உள்ள தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை
மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்
திருச்சியில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
4. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
5. தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையால் பட்டதாரி பெண் தற்கொலை முசிறி சப்-கலெக்டர் விசாரணை
தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...