மாவட்ட செய்திகள்

கொரோனா உறுதி செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Corona Confirmed Income Tax Officer commits suicide by hanging

கொரோனா உறுதி செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கொரோனா உறுதி செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் ‘சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்ணன் (வயது 54). இவரது மனைவி கலா. மணிகண்ணன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி அலுவலகத்தில் மூத்த நுண்ணறிவு (உளவு) பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.


மணிகண்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று காலை அதேப்பகுதியில் 5-வது தெருவில் உள்ள தனது மற்றொறு வீட்டிற்கு சென்றுள்ளார்.

தூக்குபோட்டு தற்கொலை

வெகுநேரமாகியும் மணிகண்ணனை காணாததால் அவரது உறவினர்கள் 5-வது தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்கு தேடி சென்றனர். அந்த வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டினர். வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். தகவல் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் அவரது உடலை பாதுகாப்பாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ பிடிக்கவில்லை

இதற்கிடையில் மணிகண்ணன் தற்கொலைக்கு முன்பு தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 4-வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
தனியாருக்கு சொந்தமாக கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
2. செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை
மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்
திருச்சியில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. கடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
5. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...