ஸ்ரீபெரும்புதூர் அருகே குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் மறியல்; 164 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 164 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் வாகனங்களுக்கு பயன்படுத்தும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் காரணமின்றி தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குகிறது. சம்பளத்தை அதிகரித்து வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மறியல்
இந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை இருங்காட்டுகோட்டையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
மறியல் போராட்டதில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 164 பேரை போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story