திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சிவன்அருள் தகவல்


திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2020 5:31 AM IST (Updated: 8 Aug 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவன்அருள் தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்,

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்திட வழிவகை செய்திடும் வகையில் சிறு தொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மாவட்ட கலெக்டர் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்ற அமைப்பு தொடங்கிட நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இச்சங்கத்தில் செயல்கள் மாவட்ட கலெக்டரை பதவிவழி தலைவராகவும், திட்ட அலுவலர், மகளிர் திட்டம் அவர்களை பதவிவழி உப தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை பதவிவழி பொருளாளராகவும் மற்றும் அலுவலர் சாரா உறுப்பினர்களாக கவுரவ செயலாளர் -1, கவுரவ இணைச் செயலாளர் -2, உறுப்பினர்கள் -3 ஆகியோர்களை கொண்டு குழுவினை அமைத்து செயல்படுத்த அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சங்க நிர்வாக குழுவில் உறுப்பினர்களாக சேர முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும், ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய சுய குறிப்புகளுடன் வருகிற 18-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story