கருணாநிதி நினைவுநாள்: உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவுநாளை ஒட்டி, அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி,
முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கீதாஜீவன் எம்.எல்.ஏ.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிவாரண உதவி
தூத்துக்குடி கீதா ஓட்டல் அருகே கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள், பாதுகாப்பு உடை ஆகியவற்றை வழங்கினார்.
அஞ்சலி
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ராம்தாஸ் நகரில் கருணாநிதி நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கி கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் மாடசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டின் பேரில், கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி மாவட்டம் முழுவதும் 850 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
புதியம்புத்தூர்
ஓட்டப்பிடாரம்அருகே உள்ள புதியம்புத்தூர் பஸ்நிலையம் அருகே கலைஞர் கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் நகர செயலாளர் லிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒட்டநத்தம்
ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் 200 ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளையும், புளியம்பட்டியில் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றில் மதிய உணவும், கே.கைலாசபுரம் கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவும், சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story