தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது


தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது
x
தினத்தந்தி 8 Aug 2020 11:45 PM GMT (Updated: 8 Aug 2020 11:45 PM GMT)

தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது.

புதுச்சேரி, 

புதுச்சேரி தேங்காய்திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன்பிடித்து விட்டு இங்கு வந்து நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 40) என்பவர் தனது விசைப் படகை இங்கு நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை ராஜேசின் நண்பர்கள் துறைமுக பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு அவரது படகு கடலில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் இது குறித்து ராஜேசுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது படகு முழுவதும் மூழ்கி கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், ராஜேசின் விசைப் படகை மர்ம நபர்கள் யாராவது மூழ்கடிக்கும் நோக்கத்தில் படகில் ஓட்டை ஏற்படுத்தினார்களா? அல்லது படகு பழுதடைந்து ஓட்டை ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கியதாக என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ராஜேஷ் தனது நண்பர்கள் உதவியுடன் படகில் உள்ள எந்திரம் மற்றும் வலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.



Next Story