மதுரையில் நோய் தொற்று குறைகிறது: புதிதாக 92 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி


மதுரையில் நோய் தொற்று குறைகிறது: புதிதாக 92 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி
x
தினத்தந்தி 9 Aug 2020 4:30 AM IST (Updated: 9 Aug 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 92 பேருக்கு மட்டுமே நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரை,

மதுரையில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்றும் மதுரையில் 92 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 67 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 282 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 989ஆக உள்ளது.

தற்போது 1,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் நேற்று 73, 72 வயது முதியவர்கள், 47, 58 வயது ஆண்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது.

Next Story