தண்டராம்பட்டு அருகே, ஆட்டுக்குட்டியை தேடிச் சென்றவர் முதலை கடித்து சாவு
சாத்தனூர் அருகே ஆட்டுக்குட்டியை தேடிச்சென்றவர் முதலை கடித்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42), விவசாயி. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விதா (37). இவர்களுக்கு குமரேசன் (17) என்ற மகனும், சந்தியா (15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவரது ஆட்டுக்குட்டியை காணவில்லை.
நேற்று அதிகாலை அவர் ஆட்டுக் குட்டியை தேடி சாத்தனூர் அணை லம்பாடி மொரம்பு பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது தண்ணீருக்குள் இருந்த முதலை முருகேசனை கடித்து விட்டது. இதில் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்ட முருகேசன் அங்கேயே இறந்து விட்டார். முதலையும் மாயமாகி விட்டது.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசேதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story