மாவட்ட செய்திகள்

சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது + "||" + The seed festival at the Sivaloganatha Sami Temple was held without devotees

சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது

சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது
காரைக்கால் சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
காரைக்கால், 

காரைக்கால் மழையின்றி வறண்டதால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் மழைவேண்டி சிவனை வழிபட்டனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்று, சிவபெருமான் விவசாயியாக தோன்றி நிலத்தில் உழுது, விதைத்தெளித்தார். அப்போது மழை கொட்டியதாக புராண வரலாற்றில் கூறப்படுகிறது.

இந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காரைக்கால் தலத்தெருவில் உள்ள சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி என்ற உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான வரலாற்று நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் இன்றி...

தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் சாமி, அம்பாள் உற்சவ சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் ஒரு சில விவசாயிகள் மட்டும் கலந்துகொண்டு, மழை வேண்டி வழிபட்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த உற்சவ நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை அறங்காவல் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக சென்னையில் தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக, சென்னையில் தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.
2. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.
3. ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
4. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி
விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நெல்லில் தமிழ் எழுத்துகளை எழுதி குழந்தைகள் வழிபட்டனர்.
5. கொரோனா பரவல் எதிரொலி: பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து
கொரோனா பரவல் எதிரொலியாக பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை