கோயம்பேடு மார்க்கெட்டில் 2 கடைகளில் தீ விபத்து


கோயம்பேடு மார்க்கெட்டில் 2 கடைகளில் தீ விபத்து
x
தினத்தந்தி 10 Aug 2020 6:59 AM IST (Updated: 10 Aug 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட்டில் 2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி,

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு தற்காலிகமாக திருமழிசையில் இயங்கி வருகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை காய்கறி மார்க்கெட்டில் உள்ள 2 கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி கடைகளில் எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சலூன் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. பூட்டிக்கிடக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது? மின்கசிவு காரணமா? அல்லது நாசவேலை காரணமா? என கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story